
கோவிட்-19 தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் அருகில் உள்ள மாவட்ட சுகாதார இலாகாவின் தடுப்பூசி நடவடிக்கை அறையைத் தொடர்பு கொள்ளுமாறு சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார். தடுப்பூசியை விரைந்து பெறுவதற்கு ஏதுவாக தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள நடவடிக்கை அறைகளை தொடர்பு கொண்டு வருகைக்கான முன்பதிவை செய்ய வேண்டும். பெட்டாலிங், கோல லங்காட், கோம்பாக், கோல சிலாங்கூர், கிள்ளான், உலு சிலாங்கூர், உலு லங்காட், சிப்பாங், சபாக் பெர்ணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி நடவடிக்கை அறைகள் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



