
பந்திங் நகரில் மிகப்பெரிய தமிழ்ப்பள்ளியாக தெலுக் பங்ளிமா காராங் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது. நேற்று இந்த பள்ளியின் ஒரு பகுதி கூரை சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மக்கிய சட்டங்களே காரணம எனக் கண்டறியப் பட்டுள்ளது. துணைக் கல்வி அமைச்சர் இன்று இந்த பள்ளிக்கு நேரடி வருகை புரிந்து சேதமடைந்த கட்டிடத்தை பார்வையிட்டார். இந்த கட்டிடத்தை பழுது பார்க்க ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்றார். புதிய கட்டடம் கட்டுவதற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் முறையாக அறிக்கை ஒன்றை சமர்பிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வெண்மணி முத்து மற்றும் துணைத் தலைவர் சி. கமலநாதன் தெரிவித்தனர். கோல லங்காட் மாவட்டத்தின் பெரிய தமிழ்ப்பள்ளியாக இப்பள்ளி விளங்குகிறது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பயிலும் வகுப்பறை கட்டிடம் 45 ஆண்டுகள் மேலானவை என்பதால் புதிய கட்டடம் கட்டப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.