
மலாக்கா மாநிலத் தேர்தலில் அம்னோ, பெர்சத்து வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு பாஸ் வேட்பாளரை நிறுத்தாது என்று அதன் துணைத் தலைவர், டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார். மும்முனைப் போட்டியை தவிர்க்க எடுக்கப்பட்ட முடிவு இது. கடந்த 14ஆவதுப் பொதுத்தேர்தலில் இக்கட்சிகளைக் காட்டிலும் சில தொகுதிகளில் மட்டுமே பாஸ் கட்சி போட்டியிட்டது என்று அவர் தெரிவித்தார்.



