
உணவகம் ஒன்றின் பெண் நிர்வாகிக்கு காயத்தை ஏற்படுத்தியதோடு கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்த உடப்பிறப்புக்கள் இருவர் மீது இன்று ஈப்போ இரு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டது. 35 வயதான எஸ்.குணசீலன் மற்றும் 42 வயதான சகோதரி ஈஸ்வரி ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இருவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரனைக் கோரினர். கடந்த 5.10.2021 மாலை 3 .10 மணியளவில் ஜாலான் ராஜா பெரெம்புவான் கலீசா உணவக உரிமையாளரின் மனைவியான 38 வயதான கே.சண்முகப்பிரியாவை மிரட்டி கொலை செய்யப்போவதாக குற்றப்பத்திரிகையில் வாசிக்கப்பட்டது. வழக்கு அக்டோபர் 21 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



