31.2 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

4ஆவது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை வென்று சென்னை அணி

🔥 Views : 7
👁 Reading Now : 31

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு துபாயில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கெய்க்வாட் 32 ரன்கள், உத்தப்பா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட டூ பிளெசிஸ் 86 ரன்கள் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். மொயீன் அலி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 50 ரன் எடுத்து அவுட்டானார். நிதிஷ் ரானா டக் அவுட்டானார். சுனில் நரேன் 2 ரன்னில் வெளியேறினார். ஷுப்மான் கில் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles