
வரும் 15 ஆவது பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் மக்கள் மத்தியிலும்,வாக்காளர்கள் மத்தியிலும் எந்தவொரு குழப்பமான சூழ்நிலைகளும் ஏற்படாமலிருக்க,பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகள் நன்கு ஆழமாக விவாதிக்க வேண்டுமென பேரா பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ எம்.ஏ.தினகரன் தெரிவித்தார். வேட்பாளரை நிறுத்தும் முடிவு தலைமைத்துவத்தை உட்பட்டு இருக்க வேண்டும். சில தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் மாநில நம்பிக்கைக் கூட்டணி தலைவர் முன் இந்த ஆவலை வெளிப்படுத்த வேண்டும். விருப்பம் போல அறிவிப்பு செய்துக் கொண்டால் சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளர்கள் மற்றும் ஆதாரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து நிறுத்துவது கட்சி தலைமைத்துவத்தின் கையில் இருப்பதால் யாரும் தங்களை குறிப்பிட்ட இடத்தின் வேட்பாளர் என்பதை பொதுவில் அறிவிக்கக்கூடாது. இந்த செயல் ஒரு ஆரோக்கியமற்றதாக அமையும் என டத்தோ எம்.ஏ .தினகரன் கூறினார்.



