
கேலா, தெமோலே போன்ற விலை உயர்ந்த மீன்களை சுத்தமான ஆறுகள், உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில்தான் நாம் பார்க்க முடியும். இருந்த போதிலும் அந்த 2 வகை மீன்களையும் தாசேக் புத்ராஜெயா மற்றும் வெட்லேண்ட் புத்ராஜெயாவிலுள்ள 56 வகை மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக புத்ராஜெயா அமைப்பு நகரத் திட்டமிடல் துறையின் மூத்தத் துணைத் தலைமை இயக்குநர், நோர்மாலிசா நோர்டின் தெரிவித்தார். இந்த மீன்கள் இங்கு இருப்பதன் மூலம் ஒரு சுகாதாரமானச் சுற்றுச்சூழல் இப்பகுதியில் இருப்பதைக் காட்டுகிறது. காரணம் அவை தூய்மைக்கேட்டினால் விரைவில் சாகக்கூடியவை. இங்கு தாசேக் பகுதியில் கடந்தாண்டு மேற்கொளப்பட்டத் தண்ணீர் தரக் குறியீட்டில் 92.8ஆகப் பதிவுச் செய்யப்பட்டது. இதன் மூலம் தண்ணீர் தரம் மிகவும் சிறப்பாக இருப்பதைக் காட்டுகிறது என்றார்.
