27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மித்ரா நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பில் புலன் விசாரணையை தொடங்கியது லஞ்ச ஊழல் தடுப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 57

மித்ரா நிதி ஒதிக்கீடு மற்றும் முறைகேடு தொடர்பாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது. மித்ரா நிதி முறைகேடு தொடர்பில் Genarasi Z Indians நேற்று புகார் செய்தது. இந்த புகாரை முழுமையாக பரிசீலனை செய்து விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்கங்கள், தனிநபர்கள், நிறுவனங்கள் மித்ரா நிதி பெற்றது தொடர்பில் முழுமையாக விசாரணை நடத்தப்படும். முறைகேடு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மித்ரா நிதி பெறப்பட்டது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மித்ராவுக்கு 10 கோடி வெள்ளி கிடைக்கவில்லை என்று ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா குறிப்பிட்டிருக்கின்றார். கடன்களை அடைக்க இந்த நிதி பயன்படுத்தப்பட்டது என்றார். கடந்த 2020ஆம் ஆண்டில் மித்ராவுக்கு 6 கோடியே 50 லட்சம் வெள்ளி மட்டுமே கிடைத்தது. இதில் மூன்று கோடியே 50 லட்சம் வெள்ளி கடன்களை அடைக்க பயன்படுத்தப்பட்டது என்றார். மித்ரா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டது உண்மை என்றால் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யும்படி அமைச்சர் ஹலிமாவுக்கு முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் பொன் வேதமூர்த்தி நேரடி சவால் விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles