
நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று நிலவரம் மேம்பாடடைந்து வருவதை கருத்தில் கொண்டு நாட்டின் எல்லைகளைத் திறப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. முழுமையாக தடுப்பூசி பெற்ற சில நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளை கட்டாய தனிமைப்படுத்துதல் நிபந்தனைக்கு உட்படுத்தாமல் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தேசிய மீட்சி மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார். வேறு சில நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளதைப் போல் தடுப்பூசி சான்றிதழை அடையாளம் காணும் பரஸ்பரத் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
