
கெப்போங்கிலுள்ள கார் கழுவும் கடை ஒன்றில் விபச்சாரத்தை நடத்தி வந்த கும்பலின் செயல் குடிநுழைவுத் துறை மேற்கொண்டச் சோதனை நடவடிக்கையில் அம்பலமானதாக அதன் தலைமை இயக்குநர், டத்தோ கைருல் ஸைமி தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் 13 வியட்னாமியப் பெண்கள், 3 தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட அனைத்து அந்நியப் பெண்களுக்கும் அடையாள ஆவணங்கள் இல்லாதது மட்டுமின்றி கூடுதலான நாட்கள் தங்கியிருந்ததோடு குடிநுழைவுச் சட்டத்தையும் மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.



