
இணையப் பகடிவதை மற்றும் சிறார் பாலியல் கொடுமைகளுக்குத் தீர்வுக் காண சிறப்பு நடவடிக்கைச் குழுவை மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு அமைத்துள்ளதாக அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா முகமட் ஹருண் தெரிவித்தார். சிறார்களை பாதுகாக்கும் வகையில் சிறார் உரிமைகளுக்கான பிரிவின் கீழ் இக்குழு அமைக்கப்படுகிறது. மேலும் சிறார்களை பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் மலேசியாவின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப இது மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி அமைக்கப்பட்ட இச்செயற்குழுவில் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், சமூக ஆர்வலர்களும் இடம் பெற்றுள்ளனர் என்றார்.



