
தடுப்பூசிச் செலுத்தப்பட்டதால் 41 ஆசிரியர்கள் மற்றும் ஈப்போவிலுள்ள 2 பள்ளி மாணவர்கள் மரணமடைந்து விட்டதாக பொய் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போலீஸார் இரண்டு யோசனை கோப்புகளை திறந்துள்ளனர் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹாசான் தெரிவித்தார். இதில் முதல் குற்றச்சாட்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும். பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த குற்றச்சாட்டு அமைந்துள்ளது. இதில் 2ஆவது விசாரணைச் தடுப்பூசிச் செலுத்தப்பட்டதால் ஆசிரியர்கள் 41 பேர் மரணமுற்றது சம்பந்தப்பட்டதாகும். இதற்கான விசாரணை அவதூறாகப் பேசியதால் 500ஆவதுக் குற்றவியல் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.



