29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வசந்தகுமார் தனது அரசியல் நாடகத்தை நிறுத்திக் கொண்டு மத்திய அரசாங்கதிற்கு எதிராக போராட வேண்டும் தீபன் சுப்பிரமணியம் சவால்

🔥 Views : 7
👁 Reading Now : 55

டூசுன் டூரியான் தோட்டப் பாட்டாளிகள் குடியிருக்கும் வீடுகள் மத்திய அரசாங்கத்தின் ஐஎல்சி நிறுவனமான Perbadanan National Berhad நிறுவனத்திற்கு சொந்தமானது. மேலும் இங்கே மின்சாரத்தை பொருத்தம் அதிகாரமும் நேஷனல் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக கைவிடப்பட்டு இருக்கும் டூசுன் டூரியான் தோட்டப் பாட்டாளிகளின் வீடமைப்புத் திட்டம் தொடர வேண்டுமானால் அது நில உரிமையாளர் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் உள்ளது. ஆகவே டூசுன் டுரியான் தோட்டப் பாட்டாளிகளுக்கு வீடுகளும் மின்சாரம் கிடைக்க வேண்டுமானால் வசந்தகுமார் மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டுமே தவிர சிலாங்கூர் அரசுக்கு எதிராக அல்ல என்று கெஅடிலான் தேசியத் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் சாடினார்.

டூசுன் டூரியான் தோட்டப் பாட்டாளிகளுக்கு எல்லா வகையிலும் சிலாங்கூர் அரசாங்கம் உதவி உள்ளது. சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் ரோட்சியா, கவுன்சிலர் ஹரிதாஸ் உட்பட நான் இங்குள்ள மக்களுக்கு உதவி கொண்டிருக்கிறோம். ஆகவே வசந்தகுமார் இங்குள்ள மக்களுக்கு போராட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மத்திய அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தட்டும் என்று தீபன் சுப்பிரமணியம் சவால் விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles