25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

துணை முதல்வர் பதவிக்கு போராட்டமா? குற்றச்சாட்டுகளை மறுத்தார் டாக்டர் ராமசாமி

🔥 Views : 8
👁 Reading Now : 48

வரும் பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட நேர்ந்தால் நான் வகிக்கும் பினாங்கு மாநில துணை முதல்வர் பதவிக்கு போராட்டம் நடக்கும் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி முற்றாக மறுத்துள்ளார். பினாங்கு ஜசெகவில் பிளவு என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அதை கட்சி தீர்மானிக்கும் என்றார் அவர். பினாங்கு மாநில ஜசெக இந்தியர்கள் அனைவரும் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். பினாங்கு மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் மிகவும் வலுவுடன் இருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles