31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

தடுப்பூசிக்கு எதிராக இருக்கும் தரப்பிடம் ஆணவம் வேண்டாம்! பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்

🔥 Views : 13
👁 Reading Now : 31

தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கும் தரப்பினருக்கு எதிராக ஆவணமாக நடந்துக் கொள்ள வேண்டாம். அவர்களை மிரட்டுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.. இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சர், கைரி ஜமாலுடின் ஆணவமாகச் செயல்படுவதாக எதிர்கட்சித் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டினார். இவர்களை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தி போதுமான விளக்கமளித்து அவர்களின் எண்ணங்களை அரசு மாற்றவேண்டும். முதலில் தடுப்பூசிச் செலுத்திக் கொள்ள விரும்பும் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வேண்டும். பிறகு அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். அதற்காக நான் அவர்களை ஆதரிப்பதாக அர்த்தமாகாது. மாறாக இவர்களின் விளக்கம் வலுவாக இருக்கக்கூடும் என்பதால் அவர்களை காட்டிலும் கூடுதல் நம்பிக்கை தரும் விளக்கத்தை நாம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles