
தீபாவளி பெருநாளுக்கு பின்னர் கிள்ளான் பள்ளத்தாக்கில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ரா ஜெயா மற்றும் மலாக்கா மாநிலங்கள் நான்காம் கட்ட மீட்சி திட்டத்தின் கீழ் வருவதால் நவம்பர் எட்டாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆரம்பப் பள்ளிகளை சேர்ந்த 1,2,3 மற்றும் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த படிவம் 3,4 மாணவர்கள் பள்ளிக்கு திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
