26.9 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

மித்ரா நிதி முறைகேடு விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும்!

🔥 Views : 19
👁 Reading Now : 68

ஏழை இந்திய சமுதாயத்திற்கு சேர வேண்டிய நிதி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது நாட்டில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடைபெறும் என்று லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விசாரணை வெளிப்படையாக விரைந்து நடத்தப்படவேண்டும் என பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இந்திய சமுதாயத்தை மேம்படுத்த வழங்கப்பட்ட நிதியை சுய லபத்திற்காக கையாடல் செய்திருந்தால், அது மன்னிக்க முடியாத ஒன்று என்று அவர் தெரிவித்தார். அவர்கள் மீது நடவடிக்கை அவசியமானது என டத்தோ ஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார். மித்ரா தொடர்பாக வழங்கப்பட்ட புகார் எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லாமல் வெளிப்படையாக இருக்க வேண்டும் என டத்தோ ஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles