31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

நவம்பர் 28ஆம் தேதி மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல்

🔥 Views : 5
👁 Reading Now : 25

வரும் நவம்பர் 28ஆம் தேதி மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று மலேசியா தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வரும் நவம்பர் 8ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்று மலாக்கா தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் கனி தெரிவித்தார். மொத்தம் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேடுதல் நடைபெறும். இம்முறை பத்து தினங்களுக்கு மட்டுமே தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி என்றார் அவர். 2018இல் நடந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று மலாக்காவில் ஆட்சியை அமைத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி கலைக்கப்பட்டு அம்னோ தலைமையிலான அரசாங்கம் அமைந்தது. டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்து விட்டது. மலாக்கா மாநிலத்தில் 91 விழுக்காட்டினர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதால் தேர்தல் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது மலாக்கா மாநில காடேக் சட்டமன்ற உறுப்பினராக ஜி. சாமிநாதன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles