32.4 C
Kuala Lumpur
Sunday, July 12, 2026

Vetri

சிங்கப்பூரில் தனது மகளை சந்திக்க நஜிப்புக்கும் அனுமதி

🔥 Views : 12
👁 Reading Now : 33

பிரசவத்திற்கு தன் மகளை சென்று காண முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா வுக்கு கோலாலம்பூர் நீதிமன்றம் அனுமதியை வழங்கியது. இந்நிலையில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் சிங்கப்பூரில் தன் மகளை சென்று காண புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி முதல் நவம்பர் 22 ஆம் தேதி வரை அவருக்கு அனைத்துலகக் கடப்பிதழை வழங்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. 1எம்டிபி நிறுவனத்திற்கு சொந்தமான எஸ் ஆர் சி இண்டர்நேஷனலில் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி மோசடி செய்ததாக குட்டைச் சட்டை எதிர்நோக்கிய டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 12 ஆண்டு சிறையும் 20 கோடி வெள்ளி அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ நஜிப் மேல்முறையீடு செய்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles