
தடுப்போசி போட்டுக்கொள்ளாத பொதுமக்களுக்கு எதிராக, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிக்கை, சம்பந்தப்பட்ட மக்களை கொடுமைப்படுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது என்று தேசிய வங்கித் தொழிலாளர் சங்கச் செயலாளர் சோலமன் கூறுகிறார். தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம்தன் என்றாலும் ஏதோ ஒருசில காரணங்களால் அவ்வாறு செய்ய மறுக்கும் மக்களுக்கு எதிராக எந்த விதமான பாகுபாட்டையோ, நெருக்குதல் கொடுப்பதையோ அல்லது அப்படிப்பட்டவர்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலோ நடவடிக்கை எடுக்கப்படுவதை தேசிய வங்கி ஊழியர் சங்கம் எதிர்க்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். “தடுப்பூசி போட மறுப்பவர்கள் கடினமான வாழ்க்கைச் சூழலை எதிர்கொள்வார்கள்” என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்திருந்த நிலையில் சாலமன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
