
வரும் நவம்பர் 4 ஆம் தேதி இந்து பெருமக்கள் தீபாவளி பெருநாளை கொண்டாடவுள்ளனர். தீபாவளிக்கு முதல் நாள் நமது முன்னோர்களுக்கு படையலிடுவது பாரம்பரியமாகும். மேலும் சிலர் இந்து மயானங்களுக்கு சென்று தங்களது முன்னோர் கல்லறைகளை சுத்தப்படுத்தி படையல் இடுவார்கள். அந்த வகையில் கெடா கூலிம் வட்டாரத்தில் உள்ள இந்து மயானம் தற்போது சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இங்கு புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு செலவாகும் மிகப் பெரிய தொகையை பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கருப்பையா ஏற்றுக் கொண்டுள்ளார். கெடா இந்து சபா மற்றும் கூட்டுறவு கழகம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று மாண்புமிகு கருப்பையா இந்த பேருதவியை செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
