33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தானில் இணைவதற்கு கெஅடிலான் இளைஞர் பிரிவு எதிர்ப்பு

🔥 Views : 8
👁 Reading Now : 49

முன்னாள் மலாக்கா மாநில முதலமைச்சர் இட்ரிஸ் ஹாரூன் உட்பட மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் பிகேஆர் கட்சியில் இணைவதை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று கெடா மாநில பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் தலைவர் முகமட் பிர்டாவுஸ் ஜொஹாரி தெரிவித்தார். மலாக்கா மாநில ஆட்சி கலைக்கப்பட்டு,இடைத்தேர்தலுக்கு இவர்கள் காரணமானவர்கள் என்பதால் இவர்களுக்கு பிகேஆரில் இணைய வாய்ப்பு வழங்கக்கூடாது என்பது பக்காத்தான் ஹராப்பான் அடிமட்ட ஆதரவாளர்கள் மற்றும் மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது என்பதை கெடா மாநில பிகேஆர் இளைஞர் பகுதி நம்பிக்கைக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார். அதனால் எந்தவொரு அழைப்பு அல்லது விண்ணப்பங்கள் மூலமாகவோ அவர்களை நம்பிக்கைக் கூட்டணிக்கு கொண்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கடுமையாக தெரிவித்தார். இதற்கு முன் மலாக்கா மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கவிழ்வதற்கும் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் காரணமாக இருந்துள்ளனர் என முகமட் பிர்டாவுஸ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles