26.4 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

மை எப்சி யாங் ஸ்டார் கிளப் ஏற்பாட்டில் வெட்ரன் மற்றும் ஒன்பதின்மர் கிண்ண கால்பந்து போட்டி

🔥 Views : 21
👁 Reading Now : 40

சிலாங்கூர் மாநிலத்தில் புகழ் பெற்ற மை எஃப் சி ஸ்டார் கிளப் ஏற்பாட்டில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி காலை 8.00 மணிக்கு வெட்ரன் மற்றும் ஒன்பதின்மர் கிண்ண கால்பந்துப் போட்டி மிகப்பெரிய அளவில் பெட்டாலிங் ஜெயா லோட் 10 திடலில் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்படும் முதல் போட்டியாக இது விளங்குகிறது என்று மை எஃப் சி யாங்ஸ்டார் கிளப் தலைவர் மணி தெரிவித்தார். வெட்ரன் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கு 5,000 வெள்ளி ரொக்கப்பரிசு காத்துக்கொண்டிருக்கிறது. இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 2,500 வெள்ளி, மூன்றாவது இடத்தை பிடிக்கும் குழுவுக்கு 1,500 வெள்ளி மற்றும் 4ஆவது இடத்தை பிடிக்கும் குழுவுக்கு 500 வெள்ளி வழங்கப்படும். ஒன்பதின்மர் கிண்ண கால்பந்து போட்டியில் வெற்றிபெரும் குழுவுக்கு 3,000 வெள்ளி, இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 1,500 வெள்ளி மூன்றாவது இடத்தை பிடிக்கும் குழுவிற்கு 1,000 வெள்ளி, நான்காவது இடத்தைப் பிடிக்கும் குழுவிற்கு 500 வெள்ளி வழங்கப்படும் என்று அவர் சொன்னார். போட்டியில் பங்கேற்க விரும்பும் குழுக்கள் மணி 010-2255726, குமார் 014-6200951, ஜோன் 011-26127553 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மணி கேட்டுக் கொண்டார். இதனிடையே நாளை 21ஆம் தேதி இரவு 8 மணிக்கு தாமான் மேடானில் உள்ள மை எஃப் சி யாங்ஸ்டார் கிளப் அலுவலகத்தில் குலுக்கல் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles