26.9 C
Kuala Lumpur
Tuesday, July 14, 2026

Vetri

வெள்ளத்தினால் கிள்ளான் தாமான் செளஜனா ஜத்தி மக்கள் பரிதவிப்பு களமிறங்கி உதவி புரிந்தார் டாக்டர் குணராஜ்

🔥 Views : 15
👁 Reading Now : 40

நேற்று பெய்த பல மணி நேர அடை மழையால் நாட்டில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான் வட்டாரத்தில் உள்ள பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளம் ஏறியதால் மக்கள் பரிதவித்தனர். கிள்ளான் தாமான் செளஜனா ஜத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் உடனடியாக உணவுகள் வழங்கப்பட்டன. கவுன்சிலர் பிரபு, மகேந்திரன் மற்றும் கிராமத் தலைவர் தங்கராஜ் ஆகியோரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் பேருதவி புரிந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles