
பலகோடி வெள்ளி மித்ரா நிதியை முறைகேடாக ஓர் அரசியல் கட்சிக்கு வழங்கியதுடன் கடனை அடைக்கவும் பயன்படுத்தியதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஹலிமா ஏன் இன்னமும் மெளனம் சாதிக்கிறார் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி உதவித் தலைவர் டத்தோ செல்வம் கேள்வி எழுப்பினார்.

தன்னுடைய அபத்தமான பேச்சால் நாடாளுமன்றத்தை தவறாக அவர் வழிநடத்தலாம்; ஆனால் இந்திய சமுதாயத்தை அல்ல. மித்ரா நிதி முறைகேடு தொடர்பில் இந்திய சமுதாயம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வாரங்களாகிவிட்டன. அவர் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்தது தெள்ளத் தெளிவானது, இருப்பினும் இந்நிதி ஏழை இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கானது என்பதால் பொதுமக்களாகிய நாங்கள் விளக்கத்தை கோருகிறோம் என்று அவர் கூறினார்.
