26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் மும்முனை போட்டிக்கு பெர்சத்து தயாராகி விட்டது

🔥 Views : 8
👁 Reading Now : 21

பெர்சத்துவுடன் இணைந்து ஒத்துழைக்கப் போவதில்லை என்று அம்னோ தலைவர், டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியதைத் தொடர்ந்து மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ள பெர்சத்து தயாராய் இருப்பதாக அதன் உச்சமன்ற உறுப்பினர், செனட்டர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இத்தேர்தல் குறித்து அம்னோவும் தே.மு.வும் எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு பெர்சத்து தயாராக உள்ளது. இதில் மும்முனைப் போட்டிக்கும் பெர்சத்து தயாராக இருப்பதால் எந்த அச்சம், கவலையுமின்றித் தேர்தலில் போட்டியிடும். ஒருவேளை இதுதான் இறுதி முடிவாக இருந்தால் நாம் ஏற்றுக் கொண்டு எதிர்கொள்வோம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles