
அம்பாங் ஆறு தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய குறைந்தது மாதம் ஒரு முறையாவது துப்புரவு இயக்கத்தை மேற்கொள்ளும்படி வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தாவரங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்கும் ஆற்றோர நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கும் இந்த துப்புரவு இயக்கம் துணை புரியும் என்று அம்பாங் நாடாளுமன்றத் தொகுதிக்கான ஒருங்கிணைப்பாளர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.



