
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் சொந்த அரங்கிலேயே 0-5 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் கிளப்பிடம் படுதோல்வி கண்டது . உலகின் தலைசிறந்த ஆட்டக்காரராக விளங்கிக் கொண்டிருக்கும் முகமட் சாலா மூன்று கோல்களை அடித்து சாதனை படைத்தார். பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மென்செஸ்டர் யுனைட்டட் சொந்த அரங்கிலேயே படுதோல்வி காண்பது இது முதல் முறையாகும். இந்த அபார வெற்றி மூலம் லிவர்பூல் 21 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய வேலையில் 14 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு மென்செஸ்டர் தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் மென்செஸ்டர் கிளப்பில் இணைந்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த படு தோல்விக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.



