
உலுலங்காட் கெஅடிலான் மற்றும் சிலாங்கூர் wave ஏற்பாட்டில் தித்திக்கும் தீபாவளி பெருநாளை முன்னிட்டு உலுலங்காட் வட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. உலுலங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் இராஜன் முனுசாமி தலைமையில் செராஸ் 9ஆவது மைலில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஜெயம் நம்நாடு இயக்கத்தின் தலைவர் டாக்டர் குபேந்திரன், காஜாங் மக்கள் மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் ஜெயகாந்தன், சுங்கை சுவா மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன்,உலு லங்காட் தொகுதி கெஅடிலான் இளைஞர் பிரிவு துணை தலைவர் விஷ்ணு, காஜாங் மாவட்ட கவுன்சிலர் இராமச்சந்திரன் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர். ஒவ்வோர் ஆண்டும் தீபத் திருநாளை முன்னிட்டு உலுலங்காட் கெஅடிலான் கட்சி சார்பில் வசதி குறைந்த மக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டு 200 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



