
வங்காளதேசத்தில் சிறுபான்மை இன மக்களாக இருக்கும் இந்துக்கள் மீது சமீப நாட்களாக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 13-ந்தேதி குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள இந்துகோவில்கள் மற்றும் இந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில் வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மலேசியாவைச் சேர்ந்த இந்திய அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மலேசியாவில் உள்ள வங்காளதே தூதரகத்தில் கண்டன அறிக்கை வழங்கப்பட்டது.



