
சபா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலின்போது தேசிய முன்னணி முதுகில் குத்தினார்கள். ஆனால் இப்போது நடைபெறும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியை முதுகில் குத்த முடியாது என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார். முன்பு அந்தப் பாம்பு நம் காலில் குத்தியது. இப்போது இரண்டாவது முறையாக அது இடத்தில் அந்த பாம்பால் குத்த முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று தேசிய முன்னணி தேர்தல் இயந்திரத்தை அவர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார். இனிமேல் பெர்சத்து கட்சியுடன் இணைந்து அம்னோ மற்றும் தேசிய முன்னணி பணியாற்றாது என்று அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.



