
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை கண்காணிக்க அதிகாரிகளை எம்.ஏ.சி.சி. பணியில் அமர்த்தும் என்று அதன் மாநில இயக்குநர், முகமட் ஷாரில் சே சாஆட் தெரிவித்தார். வேட்பாளர் நியமனம், தேர்தல் பிரசாரம், மற்றும் வாக்களிப்பு தினம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் நோக்கங்களுக்காக ஒரு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் கால கட்டத்தில் பணியில் இருக்கும் போது லஞ்ச லஞ்ச அம்சங்கள் அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை இவர்கள் கண்காணிப்பாளர் என்றார் அவர்.
