
மித்ரா மானிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எம்.ஏ.சி.சி. விசாரணைச் செய்து வருகிறது. மித்ரா நிதி இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டு நோக்கத்திற்காகப் பல்வேறு தரப்பினருக்குக் கொடுக்கும் பொருட்டு லட்சக்கணக்கான வெள்ளி மானியங்கள் வழங்கப்பட்டன. இம்மானியத்தைப் பெற்றவர்களில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது திட்டங்களைச் செயல்படுத்தத் தவறி விட்டன. ஆனால் முழுமையாகச் செயல்படுத்தி விட்டதாகக் கூறுகின்றன. இந்த நிதியில் சிலருக்கு 10 லட்சம் வெள்ளி மானியம் கிடைத்திருக்கலாம்., மிகப் பெரியத் தொகையாக 90 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் 90 லட்சம் பெற்றவர் உட்பட மித்ரா மானியத்தைப் பெற்ற அனைவரும் அத்தொகையை இந்தியர்கள் நன்மையடையக்கூடிய செயல்திட்டங்கள் உண்மையாகப் பயன்படுத்தினார்களா இல்லையா என்பது குறித்து விசாரணையில் தெரிய வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
