30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

பண்டமாரான் மற்றும் டமான்சாராவில் இளையோருக்கு தடுப்பூசி மையங்கள்

🔥 Views : 39
👁 Reading Now : 35

சிலாங்கூரிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் நாளை சனிக்கிழமை டாமன்சாரா, அப்பார்ட்மெண்ட் புளோரா, ஜி. புளோக் சமூக மண்டபத்தில் நடைபெறும். இதே போன்ற மற்றொரு நிகழ்வு பண்டமாரான் விளையாட்டு மையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா தெரிவித்தார். இந்த தடுப்பூசித் திட்டம் உள்நாட்டினர் மற்றும் அந்நியப் பிரஜைகளை மையமாக கொண்டு நடத்தப்படுகிறது. முதலாவது டோஸ் தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் மற்றும் செல்வேக்ஸ் திட்டத்தில் இரண்டாவது தடுப்பூசி பெறுவதற்கான தேதியை தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles