
ஏழை இந்திய சமுதாயத்திற்கு சேரவேண்டிய கோடிக்கணக்கான மித்ரா நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 நிறுவன இயக்குனர்களில் 11 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 11 பேர் 5,000 வெள்ளி முதல் 8,000 வெள்ளி வரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்தற்போது மித்ரா நிதி மோசடி தொடர்பில் 300க்கும் மேம்பட்ட நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மித்ரா நிதி ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது தற்போது நாட்டில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள வேளையில் இன்னும் பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..



