
நாட்டில் இதுவரை 2 கோடியே 23 லட்சத்து 61 ஆயிரத்து 734 பேருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும், 2 கோடியே 28 லட்சத்து 72 ஆயிரத்து 309 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 20 லட்சத்து 91 ஆயிரத்து 464 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும், 26 லட்சத்து 12 ஆயிரத்து 742 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றனர்.



