
2021 பினாங்கு மாநில ஆளுநரின் 82 -வது பிறந்தநாளை முன்னிட்டு,மலேசியக் குற்றத்தடுப்பு அறவாரியத்தின் பினாங்கு மாநிலத் துணைத் தலைவரும்,புக்கிட் மெர்தாஜாம் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் வாரியகுழுத் தலைவரும்,தென் செபராங் பிறை சிம்பாங் அம்பாட் சகஜ யோக மையத்தின் புரவலருமான டத்தோ புலவேந்திரன் காயம்பு அவர்கள்,உயரிய “டத்தோஸ்ரீ” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் உட்பட வட மாநிலத் தமிழ்ப் பள்ளிகள்,இந்திய அரசுசாரா இயக்கங்கள் ,ஆலயங்கள் என தமிழ் உணர்வோடு இன்று வரையில் சேவையாற்றி வரும் இந்த பெருமகனுக்கு உரிய நேரத்தில் இந்த விருது வழங்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியது. மனைவி மற்றும் மூன்று செல்வங்களுடன் ஒரு சிறந்த குடும்பத்த தலைவனாக திகழவும் இவர்,மேலும் பல விருதைகளைப் பெற AST செய்தி நிறுவனம் மனமார வாழ்த்துகிறது