29 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

5 மாதங்களாக தன் மகனை தேடுகிறா ஏழைத் தாய்!

🔥 Views : 24
👁 Reading Now : 23

கோலாலம்பூர் செராஸ் ஸ்ரீ ஜோகூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த தனது மகன் சுரேந்திரன் குமார் 26 வயது கடந்த மே மாதம் 12 தேதி வீட்டை விட்டு காலை 10.00 மணியளவில் விஜயன் த/பெ தனபால் என்ற நண்பருடன் வெளியில் சென்றார். விஜயனுக்குச் சொந்தமான VEG 1918 என்ற மோட்டார் சைக்கிளில் இருவரும் ஒன்றாகச் சென்றனர். சுரேந்திரன் குமார் மற்றும் விஜயன் அன்றைய தினம் மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பிரிக்ஃபீல்ட்ஸிலிருந்து மிட்வேலி செல்லும் வழியில் அமைக்கப்பட்ட போலீஸ் சோதனையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். பின்னர் விஜயன் கோலாலம்பூர், ஆம்பர் பிசினஸ் பிளாசாவில் உள்ள தனது பணியிடத்திற்குச் சென்றுவிட்டார். காவல்துறையின் அனுமதி கிடைக்காததால் சுரேந்திரன் குமார் அங்கேயே காத்திருக்க நேர்ந்தது. போலீஸ் தகவலின்படி சிறிது நேரத்தில் விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறது. அதன் பிறகு, சுரேந்திரன் குமார் பற்றி எந்த தகவலும் இல்லை. அவரிடம் கைத்தொலைப்பேசியும் இல்லை. அவரும் யாரையும் தொடர்புக்கொள்ளவில்லை. இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சுரேந்திரனின் தாயார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளார். சுரேந்திரன் குமார் பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் விசாரணை அதிகாரி : சர்ஜன் முகமது யாஸ்மர் பின் ஓமர் (IPD Cheras) – 019 219 3746 அல்லது தாயார் செல்வி சுப்பையா – 018 206 0227 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles