
தித்திக்கும் தீபாவளி பெருநாளை முன்னிட்டு மலேசிய மக்கள் கம்யூனிகேஷன் டாக்ஸி ஓட்டுனர் சங்க தலைவர் மற்றும் சமூக சேவையாளர் முத்து தலைமையில் 30 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசிய மக்கள் கம்யூனிகேஷன் டாக்ஸி ஓட்டுனர் சங்க தலைவர் முத்து வசதி குறைந்த மக்களுக்கு உதவி வருகிறார். அந்த வகையில் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு 30 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. பத்துகேவ்ஸ் வீனஸ் எண்டர்பிரைசஸ் இளம் தொழிலதிபர் தேவராஜ்,. பத்து கேவ்ஸ் வட்டார இளம் சமூக சேவையாளர் சிவா மற்றும் முத்து ஆகியோர் 30 பேருக்கு அன்பளிப்பு பொருட்களுக்குரிய செலவுகளை ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



