
மலாக்கா மாநில முன்னாள் முதல்வரும் சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் மற்றும் பந்தாய் குண்டோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் அஸ்மான் ஆகியோர் முறையே பக்கத்தான் ஹரப்பானில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி சார்பில் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் கெஅடிலானிலும் டத்தோ நூர் அஸ்மான் அமானாவிலும் இணைந்துள்ளனர்.



