
அம்னோவின் 2 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களால் மலாக்கா மாநிலத் தேர்தல் நடத்தப்படுவதால் அவர்கள் ஒன்றும் துரோகிகள் அல்ல என்று எதிர்கட்சித் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். கடந்த பொதுத்தேர்தலில் அம்மாநிலத்தைக் கைப்பற்றிய பக்கத்தானின் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கு மட்டுமே அவர்கள் விரும்புகின்றனர். இவர்கள் துரோகிகள் என்று சொல்லும் போது யாருக்கு துரோகம் இழைத்தார்கள்? முன்பு கூறப்படுவதைப் போல் மலாக்கா மாநில பக்கத்தான், பி.கே.ஆர்., ஜ.செ.க. மற்றும் அமானா ஆகிய 4 கட்சிகளும் கடந்த பொதுத்தேர்தலில் கிடைத்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற அவர்கள் ஆதரவைத் திரட்டுவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்



