27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

குண்டர் கும்பல்களை முறியடிக்கச் சிறப்புக் குழுவை அமைத்துள்ளது புக்கிட் அமான் போலீஸ்!

🔥 Views : 8
👁 Reading Now : 46

மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் கால கட்டத்தில் எந்த குண்டர் கும்பல் அம்சங்களும் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்த 32 சிறப்புக் குழுக்களை புக்கிட் அமான் அமைத்துள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹாசான் தெரிவித்தார். புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மலாக்கா மாநிலத்தின் 238 அதிகாரிகள் மற்றும் போலீஸ் படையினர் இதில் இடம் பெற்றிருப்பர். குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழுக்கள் புக்கிட் ஆமன் போலீஸ் தலைமையகம் மற்றும் அனைத்து மாநில போலீஸ் தலைமையகங்களையும் சேர்ந்ததாகும். இதன் முக்கிய நோக்கம் மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முறையாக நடப்பதை உறுதிச் செய்ய மாநில போலீஸ் தலைமையகத்திற்கு உதவுவதாகும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles