27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

புரோட்டோன் பெர்டானாவிலிருந்து வெல்ஃபயருக்கு மாற்றுவது முந்தைய அரசின் திட்டமாகும்

🔥 Views : 6
👁 Reading Now : 42

அமைச்சர்கள் புரோட்டோன் பெர்டானாவிலிருந்து தொயோத்தா வெல்ஃபயருக்கு மாற்றுவது முந்தைய அரசின் நிர்வாகத்தில் பரிசீலிக்கப்பட்டது. இருந்த போதிலும் இது ஒத்தி வைத்து இவ்வாண்டில் மட்டுமே அமல்படுத்தப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்தது. இந்த அதிகாரப்பூர்வ வாகனங்களை மாற்றும் காரணங்களில் வெல்ஃபயர் 2.5 வாகனத்திற்கான மாதாந்திர வாடகைத் தொகை புரோட்டோன் பெர்டானா 2.4 பிரிமியத்தைக் காட்டிலும் மிகக் குறைவாகும். பெர்டானா 2.4 பிரிமியத்திற்கான மாதாந்திர வாடகை 4 ஆயிரத்து 854 வெள்ளியாகும். வெல்ஃபயரின் வாடகை 4 ஆயிரத்து 851 வெள்ளியாகும். அமைச்சரவையின் அதிகாரப்பூர்வ வாகனங்கள் இவ்வாண்டு மாற்றுவதற்கு முன்பு 6 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு விட்டன. பொதுவாக இவ்வாகனங்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற அட்டவணையிடப்பட்டுள்ளது என்று அமைச்சு கூறியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles