
அம்னோவில் இருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் கையாளும் விதத்தில் பக்காத்தான் தவறு செய்து விட்டதை ஜ.செ.க. தலைமைச் செயலாளர், லிம் குவான் எங் ஒப்புக் கொண்டார். இருந்த போதிலும் மலாக்கா மாநில முதல்வருக்கான வேட்பாளரைத் தேர்வுச் செய்வதில் பக்கத்தான் ஹரப்பான் இனியும் தவறுகளைச் செய்யாது என்று நான் எதிர்பார்க்கிறேன். நாம் ஏற்கனவே தவறு செய்து விட்டோம். இருந்த போதிலும் தொடர்ந்து தவறுகளைச் செய்துக் கொண்டிருக்க முடியாது. இதில் மாநில முதல்வர் வேட்பாளராக அட்லி ஸாஹாரிதான் இருக்க வேண்டும் என்றார் அவர்
