
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில்,தேசிய முன்னணி சார்பில் மாநிலத்தின் இரு முன்னாள் முதல்வர்களின் பிள்ளைகள் இருவர் போட்டியிடுகின்றனர்.காலஞ்சென்ற மாநிலத்தின் 7 ஆவது முதல்வர் டத்தோஸ்ரீ முகமட் ஸின் அப்துல் கனியின் புதல்வர் சூல்கிப்ளி முகமட் ஸின் தாபோ நானிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். மற்றொருவர் முன்னாள் முதல்வர் டத்தோஸ்ரீ அபு சஹார் இஸ்னின் புதல்வி டத்தோ கைடிரா என்ற டிரா ரிம் சட்டமன்றத்திற்கு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
