25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

நெருக்கடிகள் சோதனைகள் வந்தபோதும் துணிச்சலோடு போராடியவர் சாமிநாதன்

மலாக்கா மாநில காடேக் சட்டமன்றத்தில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் ஜி. சாமிநாதன் ஒரு கொள்கை வாதி என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ் தெரிவித்தார். சாமிநாதனுக்கு ஆதரவு தெரிவிக்க இன்று வேட்புமனு தாக்கலில் கலந்து கொண்ட கணபதி ராவ் காடேக்கில் கடுமையான போட்டி நிலவினாலும் சாமிநாதன் வெற்றி பெறுவது உறுதி என்று வர்ணித்தார். சாமிநாதன் பல சோதனைகளை சந்தித்து சிறை சென்றவர். எந்த சூழலிலும் அணி மாறாமல் பக்கத்தான் ஹரப்பான் பக்கம் கொள்கையோடு இருந்தார். இவரை மக்கள் வெற்றிபெற செய்யும்படி கணபதி ராவ் கேட்டுக் கொண்டார். ரிம் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் சார்பில் போட்டியிடும் பிரசாத் குமாரை ஆதரித்து பிரச்சாரத்தில் இறங்குவேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles