
கோவிட் -19 சம்பவங்கள் அதிகரிப்பின் காரணமாக கெடா மாநிலத்தில் ஒன்பது பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இன்று தொடங்கி 14 நாட்களுக்கு பண்டார் டாருல் அம்மான் மற்றும் ஜித்ரா லுபுக் காவா ஆகிய இரு நகரங்களில் இந்த ஆணை பிறப்பிக்கப்படவுள்ளது.இதில் தாமான் மசூரி 2A , 2B மற்றும் 2C ,பண்டார் பாராட் வணிக மையம்,கம்போங் பாயா கெர்சூட் ,தாமான் தூங்கு அனும் ,கம்போங் லுபுக் காவா,தாமான் டேசா தஞ்சோங் ,தாமான் டேசா டாருள் அமான்,முக்கிம் நாகா ஆகியவை சம்பந்தப்பட்ட பகுதிகளாகும்.
சுகாதார அமைச்சின் தகவலின்படி தொற்றுகள் அதிகரித்திருப்பதால்,மே 18 -ஆம் தேதி தொடங்கி மே 31 -ஆம் தேதி வரையில் பிகேபிடி அமல்படுத்தப்படவுள்ளது.
