தெனாகா நேஷனல் வாரியத்தில் இருந்து இரண்டரை லட்சம் வெள்ளி மறுசீ்மைப்பு நிதி பெறப்பட்டு
9 நாடாளுமன்றம், 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ..விக்னேஸ்வரன் அங்கீகாரத்துடன் பிரித்து வழங்கப்பட்டுள்ளதாக
TNB இயக்குநர் வாரிய உறுப்பினர் டத்தோ என்.ரவிசந்திரன் கூறினார்.
இந்த மறுசீரமைப்பு நிதியானது மொத்தம் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 5 ஆயிரம் வெள்ளியும் குறைந்தபட.சம் 2 ஆயிரம் வெள்ளியும் வழங்கப்பட்டுள்ளதாக டத்தோ ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
மக்கள் தத்தம் வீடுகளை மறுசீரமைப்பு செய்ய இந்த உதவிநிதிக்கு தெனாகா நேஷனல் வாரியத்திடம் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆதரவில் மனு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக தெனாகா நேஷனல் இயக்குநர் வாரியம் இரண்டரை லட்சம் வெள்ளியை வழங்கியுள்ளது.
இந்த மறுசீ்ரமைப்பு நிதி எதிர்வரும் காலங்களில் மனு செய்யப்பட்டு தொடர்ந்து வழங்கப்படும் என்று டத்தோ ரவி சொன்னார்.
தெனாகா நேஷனல் மூலமாக ஏற்கெனவே பலருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த மறுசீ்மைப்பு உதவிநிதி தொடர்ந்து வழங்க மனு செய்யப்படும். அந்த மனுவில் மக்களுக்கு உதவிநிதி வழங்கப்பட வேண்டிய அவசியம் எடுத்துரைக்கப்பட்டு தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று டத்தோ ரவிச்சந்திரன் மேலும் கூறினார்.