
தற்காலிக வர்த்தக லைசென்ஸ் வைத்திருக்கும் வணிகர்கள் நிரந்தர உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்கும்படி ஷா ஆலம் மாநகர் மன்றம் எம்.பி.எஸ்.ஏ.கேட்டுக் கொண்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் தற்காலிக வர்த்தக லைசென்ஸ் காலாவதியாகும் நிலையில் சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கு வர்த்தக இடங்களை அடையாளம் காண்பதற்கு இந்த புதிய விண்ணப்பம் அவசியமாவதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் ஜமானி அகமது மன்சோர் கூறினார். முன்பு, வேலையில்லாத காரணத்தால் அதிகமானோர் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். தற்போது நிலைமை மாற்றம் கண்டுள்ளதோடு பெரும்பாலோர் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர் என்று அவர் சொன்னார்.
