28.1 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு சிலாங்கூர் பட்ஜெட்டில் கூடுதல் ஒதுக்கீடு தேவை

🔥 Views : 32
👁 Reading Now : 21

மேரு உட்பட வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை தரம் உயர்த்த 2022 வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கிடு வழங்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக மேரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பிரச்சனை மீண்டும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று முகமது பக்ருல்ராஸி முகமது மொக்தார் தெரிவித்தார். அடிக்கடி திடீர் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் கால்வாய்களை சீர் செய்வது போன்ற பணிகளில் மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles